2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

தேசிய ஒலிம்பிக் குழுவின் அங்கத்தவராக அலியார் பைஸர்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

தேசிய ஒலிம்பிக் குழுவின் அங்கத்தவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த அலியார் பைஸர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் , உடற்கல்வி ஆசிரியராக  பயிற்சி பெற்று,  கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில்  உடற்கல்வித்துறை ஆசிரியராக  கடமையாற்றி  தற்பொழுது   நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையில்  உடற்கல்வி ஆசிரியராக சேவையாற்றி  வருகிறார்.

கிழக்கு மாகாண பூப்பந்தாட்டச் சங்கத்தின் ஸ்தாபகராகவும், அதன்  பொதுச் செயலாளராகவும், இலங்கை பூப்பந்தாட்டச் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளராகவும், சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகராகவும்  அதன்  பொதுச் செயலாளராகவும் இவர் செயற்பட்டு வருகிறார்.

தேசிய ஒலிம்பிக் சபையின் அதியுயர் குழுவான கல்விச் செயற்குழு உறுப்பினராக நான்கு ஆண்டுகள் காலப்பகுதிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X