2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

’’தேசிய துப்பாக்கி சூட்டு போட்டித்தொடர் - 2025’’

R.Tharaniya   / 2025 மார்ச் 13 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ் மற்றும் தேசிய துப்பாக்கி சூட்டு சங்கத்தின் பங்களிப்புடன், "தேசிய துப்பாக்கி சூட்டு போட்டித்தொடர் - 2025 மார்ச் 06 முதல் 08 வரை புனேவயில் உள்ள கடற்படை துப்பாக்கி சூட்டு தளத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடுவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) தலைமையில் முப்படை தளபதிகளின் பங்களிப்புடன் போட்டித்தொடரின் பரிசளிப்பு விழா மிஹிந்தலை மாலிமா விடுதியில் நடைபெற்றது.

"தேசிய துப்பாக்கி சூட்டு போட்டித்தொடர் - 2025" முப்படையினர், பொலிஸ் மற்றும் 12 தனியார் துப்பாக்கிச் சூட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வீர வீராங்கனைகள் 213 விளையாட்டு வீரர்களும், முதன்முறையாக வெளிநாட்டவர்களின் பங்குபற்றுதலை குறிக்கும் வகையில் பிலிப்பைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வீரர்கள் (03) உட்பட 216 வீர வீராங்கனைகளின் பங்கேற்புடன் உள்நாட்டு போட்டி நடுவர்கள் Range Master) தவிர, இரண்டு வெளிநாட்டு (பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர்) போட்டி நடுவர்கள் அதற்கான நிபுணர் தீர்ப்பின் பங்களிப்பைக் கொண்டிருந்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளால் வழங்கப்பட்டது. Semi Automatic Standard Team Overall பிரிவில் இரண்டாம் இடத்தையும் Semi Automatic Standard Military Team பிரிவில் இரண்டாம் இடத்தையும் கடற்படையினர் வென்றனர்.

.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .