Janu / 2024 ஜூலை 17 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் 'வளரும் நட்சத்திரங்கள்' விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த மூன்று தினங்களாக மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

வடமாகாண ரீதியாக அழைக்கப்பட்ட 45 மேற்பட்ட அணிகள் பங்கு பற்றிய உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வும் வெற்றி கிண்ணத்திற்கான இறுதி போட்டியும் வளரும் நட்சத்திரங்கள் விளையாட்டு கழகத்தின் தலைவர் மரடோனா தலைமையில் இன்றைய தினம் மாலை இடம்பெற்றது.

குறித்த இறுதி போட்டியில் சாவற்கட்டு கில்லறி அணியும், நானாட்டான் டைமன் ஸ்டார் ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதி இருந்தனர்.
இதன் போது 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையை பெற்ற நிலையில் தண்ட உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது இதன் போது 4:2 என்ற கோல் கணக்கில் டைமன் ஸ்ரார் அணியினர் வெற்றி யை தமதாக்கிக் கொண்டனர்.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் , சாந்திபுரம் பங்குத்தந்தை, வளரும் நட்சத்திரங்கள் விளையாட்டு கழக வீரர்கள், சாந்திபுரம் கிராம சேவகர்,கிராம மக்கள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற அணியினருக்கும்,சிறந்த கோல் காப்பாளர்,சிறந்த வீரர்,தொடர் ஆட்ட நாயகன் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கேடயங்கள் மற்றும் பண பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

4 hours ago
6 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
16 Nov 2025