Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 12 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை தொட்டவத்தை உதைப்பந்தாட்ட சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பாந்தப்போட்டி 4வது முறையாக கடந்த 3 நாட்களாக பாணந்துறை தொட்டவத்தை அல் பஹ்ரியா முஸ்லிம் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இரவு போட்டிகளாக நடைபெற்றன.
வெற்றி பெற்ற முதலாம், இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காவது என அணிகளுக்கு பண பரிசில்களும் வெற்றிக் கிண்ணம் கையளிக்கப்பட்டது.
இக் கால்பந்தாட்டப் போட்டிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட அணிகள் பங்கு பற்றின இறுதித் தேர்வுக்கு 4 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
மல்டிலக் பெயின்ட் கம்பெனி அனுசரனை வழங்கியது. அத்துடன் பாணந்துறை வாழ் வர்த்தகர்கள் நிறுவனங்களும் அனுசரனை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டி 10ஆம் திகதி நள்ளிரவு நடைபெற்று வெற்றிக் கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
வெற்றிக் கிண்ணத்தை மல்டிலெக் கம்பெனியின் பாணந்துறை முகாமையாளர் மொஹம்மட் றிஹாஸ் மற்றும் றஸ்மி , இப்திகார், றியாஸ் றில்வான் மிஸ்வர், ஆகியோர்கள் இணைந்து பேருவளை ரியல் அணியின் தலைவர் மன்சூ விடம் கையளித்தனர்.
முதலாம் இடம் ஹஜ்ஜூப் பெருநாள் சாம்பியன் கிண்ணத்தையும் மற்றும் - மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணப் பரிசிலையும் பேருவளை ரியல் உதைப்பந்தாட்ட அணி பெற்றுக் கொண்டது.
இரண்டாம் இடம் கிண்ணமும் இரண்டு இலட்ச ரூபாய் ஹட்டன் உதைப்பந்தாட்ட அணியினருக்கும்
மூன்றாம் இடம் ஒரு இலட்சம் ரூபாய் சிட் சட் அணியினர் பாணந்துறை வழங்கப்பட்டன. நான்காம் இட அணிக்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
அத்துடன் சிறந்த வீரருக்கு பேருவளை உதைபந்தாட்ட அணி வீரருக்கு 25 ஆயிரம் ரூபாய்சிறந்த வீரர் மௌன்டன் துவிச்சக்கர வண்டி ஹட்டன் உதைபந்தாட்ட அணிக்காக வழங்கப்பட்டது.
அஷ்ரப் ஏ சமத்
11 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
1 hours ago