Shanmugan Murugavel / 2025 ஜூன் 29 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் அல்-அஷ்ரக் கால்பந்தாட்ட அணியினர் தற்காலிகமாக அனைத்து கால்பந்தாட்ட போட்டிகளில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக லீக்கின் தலைவர் முஹம்மது யமீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புத்தளம் கால்பந்தாட்ட சங்கத்தின் கீழ் நடைபெறும் நிர்வாக செயல்களில் இருந்தும் அவ்வணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் யமீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக யமீன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“புத்தளம் கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாகத்தால் முதலாவதாக அணிக்கு ஒன்பது பேர் கொண்ட தொடர் ஏற்பாடு செய்யப்பட்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி கற்பிட்டி அல்-அக்சா மைதானத்தில் நடாத்தப்பட்டது. இதன் போது இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பாக, சங்கத்தின் நிறைவேற்று குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடல் நடைபெற்றது.
நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நேரில் சம்பவத்தை பார்வையிட்டதையும் , சம்பந்தப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் மற்றும் நடுவரின் அறிக்கைகள் இவைகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில்,
அல் - அஷ்ரக் அணியில் விளையாடிய 10 வீரர்களும், அணியின் தலைவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் ட்ரிபிள் செவன் அணி வீரர்களை தாக்கியுள்ளனர் என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே லீக் நிறைவேற்று குழுவால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக” கூறியுள்ளார்.
24 minute ago
30 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
48 minute ago