Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மார்ச் 01 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் 2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டமானது, புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் சிகிச்சை நிலைய கேட்போர் கூடத்தில், தலைவர் புத்தளம் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
11 கழகங்கள் அங்கத்துவம் வகிக்கும் புத்தளம் லீக்கில்12 வது கழகமாக புத்தளம் மணல்குன்று அல்-அஷ்ரக் கழகத்தை புதிதாக இணைத்துக்கொள்ள இதன்போது பரிந்துரைக்கப்பட்டது.
இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தால் வழங்கப்பட்ட கால்பந்துகளும் இதன்போது கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
நிர்வாகக் குழுவினர்களாக பின்வரும் உறுப்பினர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைலர்: எம்.எஸ்.எம்.ரபீக் (த்றீ ஸ்டார்ஸ்), செயலாளர்: கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் (ஒடிடாஸ்), பொருளாளர்: எம்.எஸ்.எம். ஜிப்ரி (நியூ பிரண்ட்ஸ்), உதவி செயலாளர்: எம்.டீ. ரினாஸ் முஹம்மத் (த்றீ ஸ்டார்ஸ்), உதவி பொருளாளர்: சட்டத்தரணி ஏ. டபிள்யூ. அஷ்ரக் (விம்பிள்டன்), உப தலைவர்கள்: புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் ஜே.பி. (போல்டன்), எம். ஜனோசன் (யுனைட்டெட்), ஏ.எம். அஸ்லம் (விம்பிள்டன்), ஜே.எம். முஸ்தாக் (ட்ரிபிள் செவிண்), எம். சிஹானுக் (நியூ ஸ்டார்ஸ்)
உப தலைவர்கள் பதவிகள் தவிர ஏனையோர் தேர்தல் போட்டியின்றி தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago