2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாகாண மட்ட போட்டிகளில் சாதனை படைத்த நஷீம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்
பாடசாலையான பிறந்துரைச்சேனை ஷாதுலிய்யா வித்தியாலயத்தின் சார்பாக பங்கேற்ற
மாணவன் என்.எம். நஷீம் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில்
இரண்டாமிடத்தைப் பெற்று பாடசாலை வரலாற்றின் முதலாவது மாகாண மட்ட
போட்டிகளுக்கான பதக்கத்தை வென்று சாதனை படைத்து பிறந்துரைச்சேனை மண்ணுக்கும்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மாணவனை பாராட்டும் முகமாக பாடசாலை அதிபர் ஜனாப் எம்.எல் . கலீல் ரஹ்மான்
அவர்கள் தலைமையில் பாடசாலை வளாகத்தில் வரவேற்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பாடசாலை அதிபர் இந்த பாடசாலைக்கு பெருமை சேர்த்த
மாணவனுக்கும் விளையாட்டு துறையில் மாணவர்களை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியர் ஜமீல்
ஆர் கபூரி மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான அலி அக்பர் எம் இர்பான் மற்றும் வபாஸ்
மொகமட் ஆகியோருக்கும் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .