2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாகாண விளையாட்டு விழா

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆகஸ்ட் 10 ஆம் திகதி கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களின் தலைமையில் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது.

ஆகஸ்ட் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதுடன், ஆகஸ்ட் 10 ஆம் திகதி திறமையான இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும்  கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர், கந்தளாய் பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஏராளமான அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எச் ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .