Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. விஜயரெத்தினம்
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்த மாவட்ட செயலக அணியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் பாராட்டி கௌரவித்தார்.
கருணாகரனது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே. தயாபரன், மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அமிர்தலிங்கம் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்துகொண்டு மாவட்ட செயலக அணியினரை வாழ்த்தியதுடன் நினைவுச்சின்னம் உள்ளிட்ட சான்றிதழ்களையும் வழங்கிவைத்தனர்.
இதன்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவட்ட செயலக அணி வெற்றியிட்டி மாவட்ட செயலகத்துக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளமையை முன்னிட்டு மாவட்ட அரசாங்க அதிபரால் விசேடமாக பாராட்டுக்களை தெரிவித்ததுடன், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதேவேளை மாவட்ட செயலக அணியினர் பெற்றுக் கொண்ட கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வெற்றி கிண்ணத்தை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
37 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
37 minute ago
2 hours ago
4 hours ago