2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முதல் போட்டியில் வென்ற நிந்தவூர் முத்தகீன்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனையில் லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம், தனது 13ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடாத்துகின்ற இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மருதமுனை கோஸ்டல் வொரியர்ஸை நிந்தவூர் முத்தகீன்வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வொரியர்ஸ், 20 ஓவர்களில் 126 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு, 127 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய முத்தகீன் 18 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தனர்.

இத்தொடரில் 24 கழகங்கள் பங்குபற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .