Editorial / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்
கற்பிட்டி நுரைச்சோலை போல் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில், நுரைச்சோலை அல் ஜின்னாஹ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது.
கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், நுரைச்சோலை ஐக்கிய வர்த்தக சங்க தலைவருமான எம்.எச்.எம். மின்ஹாஜின் பூரண அனுசர ணையில்,நுரைச்சோலை கடற்கரை விளையாட்டு மைதானத்தில், இந்தப் போட்டிகள் அண்மையில் இடம்பெற்றன.
மொத்தமாக 58 கிரிக்கட் கழகங்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டி தொடரின் இறுதிப் போட்டியில், நுரைச்சோலை அல் ஜின்னாஹ் அணியும் கற்பிட்டி வன்னிமுந்தல் அணியும் எதிர்கொண்டன.
பரபரப்பான இறுதிப் போட்டியில், நான்கு விக்கெட்டுகளினால் நுரைச்சோலை அல் ஜின்னாஹ் கிரிக்கட் கழகம் வெற்றிபெற்றுச் சம்பியனாகியதோடு, இரண்டாம் இடத்திதை, கற்பிட்டி வன்னிமுந்தல் அணி பெற்றுக்கொண்டது.
இறுதி போட்டியின் நாயகனாக அல் ஜின்னாஹ் அணியின் எம். ரகீபும், தொடர் நாயகனாக அதே அணியின் நஜாத்தும், சிறந்த பந்துவீச்சாளராக வன்னிமுந்தல் அணியின் ரோஷனும் தெரிவாகினர்.
பரிசளிப்பு நிகழ்வில், பள்ளிவாசல் பரிபாலன சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர்ப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
26 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago