Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என அழைக்கப்படும் ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் 3 ஆவது தடவையாகவும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன.
இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை (19) யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 3 ஆவது பருவகால போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானங்களில் நடைபெற்றது.
கடந்த ஆண்டுப் போட்டியில் காலிறுதி வரையில் முன்னேறிய 8 அணிகள் நேரடியாக சுற்றுப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. மிகுதி 16 அணிகளுக்கிடையில் தகுதிகாண் போட்டிகள் நடத்தப்பட்டு, 4 அணிகள் தெரிவுசெய்யப்பட்டன.
12 அணிகள் இம்முறை சுற்றுப்போட்டியில் பங்குபற்றின. கிறாஸ்கோப்பர்ஸ், சென்றலைட்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, திருநெல்வேலி கிரிக்கெட் அணி, ஹாட்லி ஆகியன ஒரு பிரிவாகவும், ஸ்கந்தா ஸ்ரார்ஸ், சென்ரல், யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, விங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவாகவும் போட்டிகளில் பங்குபற்றின.
முதற்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று தொடர்ந்து காலிறுதி ஆட்;டங்கள் நடைபெற்று, அரையிறுதியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலை அணி ஜொனியன்ஸ் அணியையும், சென்றலைட்ஸ் அணி சென்ரல் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
2012 ஆம் ஆண்டு ஜே.பி.எல் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்கள் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த இரண்டு வருடங்களிலும் கொக்குவில் மத்திய சனசமூக நிலையமும் சென்றலைட்ஸ் அணியும் மோதியிருந்தன. இதில் முதல் வருடம் (2012) கொக்குவில் மத்திய சனசமூக நிலையமும் அடுத்த வருடமான 2014 ஆம் ஆண்டு சென்றலைட்ஸ் அணியும் சம்பியனாகின.
தற்போது, மூன்றாவது தடவையாக இவ்வருடம் அதே அணிகள் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. சென்றலைட்ஸ் அணி எஸ்.மயூரன் தலைமையிலும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி ஏ.ஜெயரூபன் தலைமையிலும் களமிறங்குகின்றன.
சென்றலைட்ஸ் அணிக்கு பலமான துடுப்பாட்ட வரிசை அமைந்துள்ளது. வி.வதூஸன், ஆர்.ஜேம்ஸ்ஜான்சன், ஏ.எட்வேர்ட்எடின், எல்.செல்ரன், சி.ஜெனோசன், சி.கோகுலன், யூலியஸ் கலிஸ்ரன் என துடுப்பாட்ட வரிசை பலமாகவுள்ளது. அதேபோல் பந்துவீச்சும் அதே ஒழுங்கில் காணப்படுகின்றது.
கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணிக்கு, அணித்தலைவர் ஜெயரூபனின் துடுப்பாட்டம் பெரும் பலமாகவுள்ளது. ஜெயரூபன் களத்தில் நின்றால் வெற்றியைப் பெறும் என்னும், நிலையில் அவ்வணி இருக்கின்றது. துடுப்பாட்ட வரிiயில் எஸ்.உமாநாதன், எஸ்.சத்தியன், ஆர்.ஜனுதாஸ், எல்.ஆதித்தன், வி.வல்லவக்குமரன் என அணியின் வெற்றிக்காக பாடுபடக்கூடியவர்கள் இருக்கின்றனர். துடுப்பாட்டம் போல வீரர்களில் பெரும்பாலானவர்கள் சகலதுறை ஆட்டக்காரர்களாக இருக்கின்றனர்.
இரு அணிகளும் மிகவும் பலம்வாய்ந்த அணிகளாக இருக்கின்றமையால், இறுதிப்போட்டியானது மிகவும் சுவாரஸியமாக அமையும்.
3 ஆம் இடத்துக்கான போட்;டி சனிக்கிழமை (19) காலை 9 மணிக்கு நடைபெறுகின்றதுடன், இதில் ஜொனியன்ஸ் அணியை எதிர்த்து சென்ரல் அணி மோதுகின்றது.
paddu j c c Friday, 18 September 2015 04:36 PM
valthukkal j c c
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago