2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யாழில் சாதித்த யுவதிக்கு கௌரவிப்பும்

R.Tharaniya   / 2025 ஜூன் 23 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்டோரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற T20 Bash மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

விக்டோரியன் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமான ச.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக விக்டோரியா கல்லூரியின் முன்னாள் அதிபர் வ.சிறீகாந்தன் கலந்து சிறப்பித்தார்.

27 அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு union மற்றும் centralites ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன.இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று மோதிய நிலையில் union அணியானது 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அத்துடன் centralites அணியானது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது. குறித்த நிகழ்வின் போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜெயந்தன் மற்றும் தேசிய மட்ட வேகநடை போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாவது இடம் பெற்ற தமிழரசி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். 

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X