Shanmugan Murugavel / 2022 மார்ச் 07 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கல்முனையின் முன்னணி விளையாட்டுக் கழகங்களுள் ஒன்றான லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 13 ஆண்டுகள் நிறைவையொட்டி ஒழுங்கு செய்துள்ள மென்பந்தாட்ட கிரிக்கெட் திருவிழாவானது இம்மாதம் 19 ஆம், 20ஆம் திகதிகளில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திலும், மருதமுனை மசூர் மௌலானா சதுக்கத்திலும் இடம்பெறவுள்ளது.
ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இத்தொடரில் நாடு தளுவிய ரீதியில் 50 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கவுள்ளதாகவும், இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்படும் அணிக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் சம்பியன் கிண்ணமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் பரிசாக வழங்கப்படவுள்ளதாக லெஜன்ஸ் விளையாட்டுக்கழக செயலாளர் ஏ.எல்.எம். அஸீம் (அலைபேசி இல: 0772202222 ) தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .