Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 31 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சென் கூம்ஸ் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (30) அன்று பாடசாலையின் அதிபர் நாகரட்ணம் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பழைய மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏந்திய வண்ணம் வாகன பேரணியுடன் சென்கூம்ஸ் வீதி வழியாக பாடசாலை விளையாட்டு மைதானத்தை வந்தடைந்ததன் பின்னர் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக நுவரெலியா வலயக் கல்விப் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ், கோட்டம் ஒன்றின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் காந்தரூபன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சுசந் வீரசேன, தேயிலை ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் ஏ.பி.ரணதுங்க, பாடசாலையின் அதிபர் தங்கராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதன்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளர் காந்தரூபன் பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வைப்பதையும் காணலாம்.
பி.கேதீஸ்
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago