Shanmugan Murugavel / 2025 ஜூன் 29 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் ஓட்டப் போட்டிகள் மற்றும் தட்டெறிதல் போட்டிகள் என்பவற்றில் கோட்ட மட்டம் மற்றும் வலய மட்டங்களில் சாதனைகள் நிலை நாட்டியுள்ளனர்.

பயிற்சிகளுக்கான விளையாட்டு மைதான வசதிகள் அற்ற நிலையிலும் இந்த மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ்.எம். அரூஸ் தெரிவித்தார்.
இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் பாடசாலையின் காலைக் கூட்டத்தில் இடம்பெற்றது.
இதில் 12 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 50 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கற்பிட்டி கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், வலய மட்டத்தின் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு அதில் ஐந்தாம் இடத்தை பெற்ற எம்.எஸ்.எம். அப்ரத், எம்.ஏ. அதிப், எப்.எம். பஜிர், எஸ்.எம். றிஜாப் அகிய அஞ்சல் ஓட்ட அணி வீரர்கள் மற்றும் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் தட்டெறிதல் போட்டியில் கோட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் ஆர்.எம். றிஷாத் ஆகியவர்களே இவ்வாறு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இம் மாணவர்களின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்த விளையாட்டு துறை ஆசிரியர்களான எம்.எஸ். சாஹிர், எம்.ஜே.எம். ஜெஸ்லின் ஆகியோருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் சார்பாகவும் பாடசாலை நிர்வாக் குழு சார்பாகவும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அரூஸ் தெரிவித்தார்.
16 minute ago
22 minute ago
40 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
40 minute ago
58 minute ago