Shanmugan Murugavel / 2021 மார்ச் 18 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
- றாசிக் நபாயிஸ்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் முதற் கட்டமான பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவானது, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ. முபாரக் அலி, கல்முனை பிரதேச இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உபதலைவருமான எ.எல்.எம். அஸ்கி, கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம். ஜெஸார், அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன உப செயலாளர் எ.பி.எம். சிம்சார்,
கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஊடக மற்றும் தகவல் பிரிவு இணைப்பாளர் எம்.என்.எம். அப்ராஸ், இளைஞர் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை கல்முனை பிரதேச செயலக பிரிவின் இவ்வாண்டுக்கான இளைஞர் விளையாட்டு விழாவானது அடுத்த மாதம் நான்காம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், இப்போட்டிகள் யாவும் கல்முனை
சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானம், கல்முனை கடற்கரை பகுதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago