Shanmugan Murugavel / 2026 மார்ச் 03 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் பிரதான விளையாட்டு மைதானமான வெபர் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்காக 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மாகாண ஆளுநரால் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிதி, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தின் மெய்வல்லுனர் பயிற்சி மற்றும் கூடைப்பந்தாட்ட திடல் ஆகியவற்றை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் மூலம் மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிப்பதுடன், பிராந்திய மட்டத்தில் போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
43 minute ago