2025 நவம்பர் 19, புதன்கிழமை

2016 தேசிய விளையாட்டு விழாவுக்கான கலந்துரையாடல்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

2016 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமையால் அதில் அதிகளவான வடக்கு மாகாண வீர, வீராங்கனை பங்குபற்ற வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (17) கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கல்வி, விளையாட்டு, மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள விளையாட்டுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய விளையாட்டு விழாவுக்காக வீர, வீராங்கனைகளின் திறன்களை வளர்த்தெடுத்தல், அதிகளவான வீர, வீராங்கனைகளை பங்குபற்றச் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண விளையாட்டு அமைச்சின் இணைப்பாளர் இமானுவல் ஆர்னோல்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X