2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தேசிய மட்ட வொலிபோல் போட்டி - 2012 ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மஞ்சு வெற்றிக்கிண்ணத்துக்கான தேசிய மட்ட வொலிபோல் போட்டி - 2012 இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. குறித்த போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமைவரை இடம்பெறவுள்ளது.

இலங்கை வொலிபோல் சம்மேளத்தின் அனுசரனையில் மன்னார் மாவட்ட வொலிபோல் சங்கம் குறித்த போட்டியினை நடாத்துகின்றது. குறித்த போட்டியில் சகல மாவட்டங்களிலும் இருந்தும் 36 ஆண், பெண் அணிகள் கலந்துகொள்கின்றனர்.

முதல் நாள் போட்டியான இன்றைய தினத்தில் பிரதம விருந்தினர்கலாக அமைச்சர்கலான டிலான் பெரேரா மற்றும் றிஸாட் பதீயுதீன் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, பிரதேச செயலாளர்கள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஏற்பாட்டுக் குழுவினால் வருகை தந்த பிரமுகர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு வருகை தந்த அதிதிகளினால் போட்டி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X