2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வலைப்பந்தாட்ட போட்டியில் மஹர சிறைச்சாலை அணி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.எப்.எம். தாஹிர்)


அகில இலங்கை சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விளையாட்டு சங்கங்ளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில் மஹர சிறைச்சாலை அணி வெற்றிப்பெற்றுள்ளது.

பதுளை வில்ஸ் பார்க் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாடு முழுதும் இருந்து 15 அணிகள் மோதின.

இப்போட்டிகளில் இறுதி போட்டிக்கு மஹர சிறைச்சாலை பெண்கள் அணியும், போகம்பர சிறைச்சாலை பெண்கள் அணியும் தெரிவாகின.

இறுதிப் போட்டியில் மஹர அணி 13:10 என்ற அடிப்படையில் போகம்பர அணியை தோட்கடித்து  சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஆண் பெண் இருபாலாருக்குமான போட்டியில் சிறைச்சாலை தலைமையக அணி, பதுளை சிறைச்சாலை அணியும் மோதிக் கொண்டன. இப்போட்டியில் பதுளை சிறைச்சாலை அணிகளை தோட்கடித்து சிறைச்சாலை தலைமையக அணி வெற்றி பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ.டபள்யூ.கொடிப்பிளி கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கினார்.

இதன்போது பதுளை சிறைச்சாலை பிரதான அதிகாரி அனுர ஏக்கநாயக்க மற்றும் பிரதான ஜெயிலர் ரோஹன கலப்பத்தி ஆகியோரும் போட்டிகளுக்கு பூரண அனுசரணை வழங்கினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X