2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பெண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு, யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே இடம்பெற்ற பெண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது.

மானிப்பாய் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டு மைதானத்தில நேற்று செவ்வாய்க்கிழமை; இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ். பிரதேச செயலக அணியும் உடுவில் பிரதேச செயக அணியும் மோதிக்கொண்டன.

இரண்டு ஒற்றையர் ஆட்டத்தையும் ஒரு இரட்டையர் ஆட்டத்தையும் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இரண்டு ஒற்றையர் ஆட்டத்தையும் உடுவில் பிரதேச செயலக அணி வெற்றி பெற்;றதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவடைந்தது.

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் உடுவில் பிரதேச செயலக அணியைச்சோந்த ஜே.நிவர்சிகாவும் யாழ். பிரதேச செயலக அணியைச்சேர்ந்த எ.கீர்த்திகாவும் மோதிக் கொண்டார்கள்.

இந்தப் போட்டியில் ஜே.நிவர்சிகா 21:17, 1:15 புள்ளிகள் எனற அடிப்படையில் வெற்றி பெற்றார்.

இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் உடுவில் பிரதேச செயலகத்தைச்சேர்ந்த எஸ்.நிஷாந்தினியும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆர்..நிஷாதரணியும் மோதிக்கொண்டார்கள்.

இந்தப் போட்டியில் எஸ்.நிஷாந்தினி  21:15, 21:16 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிப்பெற்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X