2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மட்டு. சிறையில் புத்தாண்டு விளையாட்டு விழா

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சித்திரைப் புத்தாண்டையொட்டி நேற்று சனிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச்சங்கமும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து ஏற்பாடு செய்த இப்புத்தாண்டு விளையாட்டு விழா மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்றது. சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் கே.ஜே.கஜநாயக்க, உதவி ஜெயிலர் எஸ்.மோகன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள்,  நலன்புரி அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கயிறு இழுத்தல், விநோத உடை, போத்தலில் நீர் நிரப்புதல் போன்ற விளையாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X