2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சர்வமத அமைப்பின் உதைப்பந்தாட்ட போட்டியில் திருகோணமலை அணி சம்பியன்

Super User   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் சமூதாய அபிவிருத்தி ஆகியவற்றின் ஊடாக சமூதாய சக்தி வலுவூட்டலுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் திருகோணமலை அணி  வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிண்ணியா அணியை எதி;ர்த்தாடிய திருகோணமலை அணி பெனால்டி உதை மூலம் இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்டது

இத்தொடரில் 3ஆம் இடத்தை கந்தளாய் அணியும் 4ஆம் இடத்தை மூதூர் அணியும் பெற்றுக்கொண்டன. திருகோணமலை மாவட்ட சர்வமத அமைப்பின் கிண்ணியா பிரதேச அமைப்பாளர் மௌலவி எம்.வைஹதியத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இந்து, முஸ்லிம் மற்றும் பௌத்த சமயத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X