2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ். இந்து மகளிர் கல்லூரி சம்பியன்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்

மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி, யாழ்.மாவட்ட 19 வயதுப்பிரிவு பாடசாலை கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் விலகல் முறையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் இராமநாதன் மகளிர் கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்று வந்தது.

இறுதிப்போட்டி மற்றும் மூன்றாமிடத்திற்கான போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இராமநாதன் மகளிர் கல்லூரியினை எதிர்த்து யாழ்.இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. இப்போட்டியில் 42:33 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ். இந்து மகளிர் கல்லூரி அணி வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

மூன்றாமிடத்திற்கான போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடம் மோதியது. இப்போட்டியில் யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடம் 52:12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .