2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

அரையிறுதிக்கு ஞானமுருகன் அணி தகுதி

Kogilavani   / 2013 நவம்பர் 05 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்தின் சமர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் தமது அரையிறுதி வாய்ப்பினை ஞானமுருகன் அணி உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் பாடும்மீன், சென்.ஹென்றிஸ், சென்.மேரிஷ; அணிகள் அரையிறுதி வாய்ப்பினைத் தக்க வைத்திருக்கின்ற போதும், நடக்கவுள்ள போட்டிகள் சிலவேளைகளில் அணிகளின் நிலைகளில் மாற்றத்தினைக் கொண்டு வரலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊரெழு றோயல் அணி யாழ்.மாவட்டத்திலுள்ள கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டிகளினை உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

64 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் முதல் மூன்று சுற்றுக்களும் விலகல் முறையில் நடைபெற்று, 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து 8 அணிகளுக்குமான போட்டிகள் லீக் முறையில் நடைபெற்று வந்தது.

கடந்த சனிக்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணி 05: 03 என்ற கோல் அடிப்படையில் வல்வை அணியினையும், ஊரெழு றோயல் அணி 04:03 என்ற கோல் கணக்கில் இளவாலை ஹென்றிஸ் அணியினை வென்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற போட்டியில் குருநகர் பாடும்மீன் அணி 02: 01 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியினையும், மயிலங்காடு ஞானமுருகன் 05: 01 என்ற கோல் கணக்கில் றெட் றேஞ்சர்ஸ் அணியினையும் வென்றன.

திங்கட்கிழமை (04) நடைபெற்ற போட்டியில் இளவாலை ஹென்றிஸ் அணி 04: 02 என்ற கோல் கணக்கில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியினையும், நாவாந்துறை சென்.மேரிஷ் அணி 05: 02 என்ற கோல் கணக்கில் ஊரெழு றோயல் அணியினையும் வென்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X