Janu / 2025 நவம்பர் 20 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனையில் கடந்த 7 ஆம் ஆம் திகதி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் முன்னாள் கொமாண்டோ வீரர் மற்றும் கூலிக்கு கொலையாளியாக செயற்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் மஹியங்கனை பகுதியில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.
பழனி ரெமோஷன் என்ற நபர் ஐந்து லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாகவும், சந்தேக நபர் அதற்காக ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரின் சாரதி , துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தங்குமிடம் வழங்கிய நபர், சாரதிக்கு தங்குமிடம் வழங்கிய இரண்டு பேர் மற்றும் அவருக்கு ஆதரவளித்த நபர்கள் சந்தேக நபர்களில் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .