2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தின் எல்லே போட்டிகள் ஆரம்பம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், சொர்ணகுமார் சொரூபன்


யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற எல்லேப்போட்டிகள் இன்று (05) முதல் யாழ்ப்பாணம் மத்;திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகின.

போட்டிகளை யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா ஆரம்பித்து வைத்தார்.

இந்த எல்லேச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம், தெற்கு, முப்படைகள், மற்றும் பொலிஸ் ஆகியவற்றிலிருந்து 31 அணிகள் பங்குபற்றுகின்றன.
போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பலாலி இராணுவ மைதானம் ஆகிய மைதானங்களில் இன்று (05) நாளை (06) ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .