2025 நவம்பர் 19, புதன்கிழமை

மல்யுத்தப்போட்டியில் கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் வெற்றி

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மல்யுத்தப்போட்டியில் கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகள் தேசிய விளையாட்டு விழா - 2014 கடந்த 14,15,16ஆம் திகதிகளில் கொழும்பு அசோகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

17 வயதுக்குட்பட்ட மல்யுத்தப்போட்டியில் 58 கிலோ கடேற் பிரிவில் என்.பிரகாஸ் மற்றும் 19 வயதுக்குட்பட்ட 55 கிலோ கடேற் பிரிவில் என்.நிசோத் ஆகியோர் வெள்ளிப்பதக்கங்களை பெற்று பாடசாலைக்கும் மற்றும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X