2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதி சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி

George   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


அணிக்கு 6 பேர் கொண்ட, ஜனாதிபதி சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான பிரதேச மட்ட தெரிவு போட்டி இன்று சனிக்கிழமை(20) மட்டக்களப்பு களுதாவளை பொது மைதானத்தில் ஆரம்பமானது.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று, போரதிவுப்பற்று, மண்முனை மேற்கு ஆகிய 3 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொண்டன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து 22 கழகங்களும், போரதிவுப்பற்று பிரதேசத்திலிருந்து 9 கழகங்களும், மண்முனை மேற்கு பிரதேத்திலிருந்து 6 கழகங்களும் விளையாடின. 

ஒரு பிரதேசத்திலிருந்து ஒரு கழகம் வீதம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேசங்களிலுமிருந்து 14 கழகங்கள் தெரிவு செய்யப் படவுள்ளன.

இவ்வாறு தெரிவு செய்யப்படும் 14 கழகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட கிரிக்கெட் தெரிவுப் போட்டி எதிர் வரும் மாதம் மட்.சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் கூறினார்.
 
 ஜனாதிபதி சவால் கிண்ண அணிக்கு 6 பேர் கொண்ட தேசிய மட்ட கிரிக்கெட் சுற்று இறுதிப் போட்டிக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  4 கழகங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இறுதிப்போட்டி பற்றிய விபரம் இதுவரை அறிவிக்கப் படவில்லை. 

இப்போட்டிகள் யாவும், நீலப்படையணி, தேசிய இளைஞர் சேவை மன்றம், கிழக்கு அபிவிருத்தி மன்றம், இலங்கை இராணுவம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெறுவதாக  அவர் மேலும் கூறினார்.

தேசிய மட்ட இறுதிப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு 3 இலட்சம் ரூபாவும், இரண்டாம் இடம்பெறும் அணிக்கு 2 இலட்சம் ரூபாவும், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்கப்படும்.

இன்று (20) களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தல் நடைபெற்ற பிரதேச மட்ட தெரிவுப் போட்டியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா, மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், இலங்கை இராணுவத்தின் 231ஆவது கட்டளைத் தளபதி பாலித்த பெணாண்டோ, மற்றும் இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்கள், விளையாட்டுக் கழகங்களின் அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .