2025 ஜூலை 09, புதன்கிழமை

மூன்று நாள் சாரணர் பாசறை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா
, எஸ்.எம்.எம்.றம்ஸான்

அக்கரைப்பற்று, கல்முனை சாரணியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் சாரணர் பாசறை சம்மாந்துறைக் கல்வி வலயத்துக்கு உட்;பட்ட இறக்காமம் அல் மதீனா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இந்த சாரணர் பாசறையின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (28) நடைபெற்றது.

இப்பாசறை தெரிவில் முதலாம் இடத்தை கல்முனை ஆர்.கே.எம்.வித்தியாலயமும் இரண்டாவது இடத்தை கல்முனை அல்பஹ்ரியா வித்தியாலயமும் மூன்றாவது இடத்தை இறக்காமம் இல்மதினா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.

இறுதிநாள் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல.எம்.நஸீர், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரும் மாகாண சாரணிய ஆணையாளருமான யூ.எல்.எம்.ஹாசீம், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் உதவி மாவட்ட சாரணிய ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ், உதவி மாவட்ட சாரணிய ஆணையாளர்களான ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் உதுமாலெப்பை, ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .