2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நோர்வூட் இளைஞர் கழக அணி வெற்றி

George   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்


தீபாவளி திருநாளையொட்டி,  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிக்கு ஆறு பேர் கொண்ட உதயா வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நோர்வூட் இளைஞர் கழக அணி முதலாவது இடத்தையும் ஹட்டன் இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இறுதி சுற்றுப் போட்டி,  ஞாயிற்றுக்கிழமை (26) டிக்கோயா தரவளை விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றதுடன் இறுதிசுற்றுப் போட்டிக்காக  நுவரெலியா மாவட்டத்திலிருந்து எட்டு அணிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இறுதிப்போட்டியில் மாகாணசபை உறுப்பினர்  உதயா, அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்த சுற்றில் முதலாம் இடத்தை பெற்ற அணிக்கு 50,000 ரூபாய் வழங்கப்பட்டதுடன் இரண்டாம் மூன்றாம் இடத்தைபெற்ற அணிகளுக்கு, 25,000 ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் பணப்பரிசுளுக்கான காசோலைகளும்  வெற்றக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியை  மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயா ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .