2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியன்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, எஸ்.குகன்

யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்;பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக மானிப்பாய் இந்து கல்லூரி அணி சம்பியனாகியது.

யாழ் மாவட்டப் பாடசாலைகள் விளையாட்டு சங்கம், பிரித்தானியா நாட்டின் இலங்கை தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஆதரவுடன் வருடாந்தம் நடத்தும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலாக கால்ப்பந்தாட்ட போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரி மைதானங்களில் இடம்பெற்றது.

முதற்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து இறுதிப்போட்டி வியாழக்கிழமை (06) யாழப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மானிப்பாய் இந்து கல்லூரி அணி மோதியது.

ஆட்டம் தொடங்கிய நேரம் முதல் மானிப்பாய் இந்து அணியின் பலம் ஓங்கி காணப்பட்டது. அவ்வணியின் என்.தனுசன் தனது அணிக்கான முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். சில நிமிடங்களில் அவ்வணியின் எம்.ஜனார்த்தனன் அணிக்கான 2 ஆவது கோலையும் அடித்தார்.

முதல் பாதியாட்டத்தில் மானிப்பாய் இந்து கல்லூரி அணி 2:0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி புது உத்வேகத்துடன் விளையாடியது.

அதன் பயனாக அவ்வணியின் வீரர் பி.விதுசன் அணிக்கான முதல் கோலை அடித்தார். மேற்கொண்டு கோல்கள் அடிப்பதற்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முயன்ற போதும், அந்த முயற்சிகள் மானிப்பாய் இந்து அணியின் பின்கள வீரர்களின் சாதுரியத்தால் முடியாமல் போனது.

இறுதியில் மானிப்பாய் இந்து கல்லூரி அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கான கேடயங்களை வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆ.இராஜேந்திரன் வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .