2025 ஜூலை 09, புதன்கிழமை

தேசிய ஹொக்கி சுற்றுப்போட்டிக்கான யாழ். அணி புறப்பட்டது

Thipaan   / 2014 நவம்பர் 12 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


கொழும்பு ரொறிங்டன் மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (13) ஆரம்பமாகவுள்ள 58ஆவது தேசிய சிரேஷ்ட ஹொக்கி சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்கான யாழ். அணி, புதன்கிழமை (12) கொழும்புக்கு புறப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பாடசாலைகள், கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்களை கொண்ட யாழ். மாவட்ட அணியே தேசிய மட்ட போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளது.

யாழ். அணியின் தலைவராக என். ஜனந்தனனும் உபதலைவராக ரி.மஹிந்தனும் உள்ள அதேவேளை, அணியின் முகாமையாளராக எஸ்.கோபிநாத்தும், பயிற்றுவிப்பாளராக எஸ்.ஸ்ரீரஜீவனும் கடமையாற்றுகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .