2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் அணி வெற்றி

Thipaan   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய பழைய மாணவர் உதைப்பந்தாட்ட அணிக்கும் பாடசாலையின் ஆசிரியர்  உதைப்பந்தாட்ட அணிக்குமிடையில் இடம்பெற்ற சினேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டியில் ஆசிரியர் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.

இப்போட்டி அந்-நூர் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன் கிழமை(03) காலை இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஏ. இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.உவைஸ், எஸ்.எல். முனால், அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், பிரதி அதிபர் எம்.ஏ.அப்துல் ஹை, உதவி அதிபர் எம்.ஐ.எம்.ஹாசீம் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் மிகவும் பலத்துடன் மோதிய போதிய போதிலும் கோல்கள் எதனையும் போட முடியாமல் போனது.
இடைவேளையின் பின்னர் ஆசிரியர்கள் அணியின் வீரர் எம்.எச்.எம். றஸ்ஸாமினால் பெறப்பட்ட கோலின் மூலம் இப்போட்டியின் சம்பியின் கிண்ணத்தை ஆசிரியர் அணி பெற்றுக் கொண்டது.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .