2025 ஜூலை 09, புதன்கிழமை

கண்டி அணி வெற்றி

George   / 2014 டிசெம்பர் 15 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


முதற்தரக் கழகங்களுக்கிடையே இடம் பெற்று வரும் டயலொக் கிண்ணத்துக்கான றகர் லீக் போட்டித் தொடரில் மற்றுமொரு போட்டியில் கண்டி அணி வெற்றி பெற்றது.

சீ.ஆர். என்ட். எப்.சி. அணிக்கும் கண்டி அணிக்குமிடையில் கண்டி நித்தவலை றகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(14) மாலை இடம்பெற்ற இப்போட்டியில் கண்டி அணி 19- 13 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை மிக விறு விறுப்பாக நடைபெற்றதுடன் போட்டி ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் இலங்கை றகர் அணியின் முன்னாள் தலைவரான பாசில் மரீஜா கண்டி அணிக்காகப் பெற்றுக் கொடுத்த ட்ரை மூலம் கண்டி அணி புள்ளிகள் பெற ஆரம்பித்தது.

வெளிநாட்டு வீரரான குயின்டன் மேலதிக புள்ளியைப் பெற்றுக் கொடுக்க இடைவேளை ஆகும் போது  கண்டி அணி    7 - 0  என்ற நிலையில் முன்னிலை வகித்தது.

இடைவேளையை அடுத்து சீ.ஆர். அணி மிக இறுக்கமாக விளையாட ஆரம்பித்ததுடன் கண்டி அணி சற்று நிதானம் இழந்து காணப்பட்டது.

இருப்பினும் கண்டி அணியின் நட்சத்திர வீரர் பாசில் மரீஸா மேலும் ஒரு ட்ரையை வைக்க மேலதிகப் புள்ளியுடன் கண்டி அணி 14-0 என்ற அடிப்படையில் முன்னேறியது.

அதனை அடுத்து கண்டி வீரர் ஒருவர் இழைத்த தவறு காரணமாக இலகுவான பெனல்டி ஒன்றை சீ.ஆர். அணி பெற்று 14- 3 என்ற நிலை ஏற்பட்டது.

கண்டி அணி மேலும் ஒரு ட்ரையைப் பெற 19-3 என்ற நிலை காணப்பட்டாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சீ.ஆர்.அணி அடுத்தடுத்து இரண்டு ட்ரைகளை வைக்க புள்ளி 19-13 ஆக இருக்கும் போது போட்டி முடிவடைந்தது.

மொத்தமாக கண்டி அணி 2 கோல் 1 ட்ரையை பெற்று 19 புள்ளிகளையும் பெற்றதுடன் சீ.ஆர் அணி 2 ட்ரை 1 பெனல்டி மூலம் 13 புள்ளிகளைப் பெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .