2025 நவம்பர் 19, புதன்கிழமை

தமிழ்மிரர் ஊடக அனுசரணையில் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி

George   / 2015 ஜனவரி 13 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்மிரர் இணையத்தளத்தின் ஊடக அனுசரணையில், சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் நடத்தும் தைப்பொங்கல் மென்பந்தாட்ட துடுப்பாட்டம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த சனிக்கிழமை(10) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண்ட இந்தச் சுற்றுப்போட்டியில் 50 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றி வருகின்றன. 

முதற்சுற்று மற்றும் காலிறுதி ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்கள் என்பன கடந்த இரண்டு நாட்களில் முடிவடைந்துள்ளன.

இதனடிப்படையில் அரையிறுதிக்கு பொற்பதி விளையாட்டுக்கழகம் மற்றும் மல்லாகம் எஸ்.எம்.எஸ் விளையாட்டுக்கழகம் என்பன தகுதி பெற்றுள்ளன.  

அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்கள் பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X