2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆனமடு ஏ.பீ.சி. அணி வெற்றி

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நாகாஸ் விளையாட்டு கழகம் நடத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட கிரிக்கட் போட்டியில்  ஆனமடு ஏ.பீ.சி. அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டி தொடரானது திங்கட்கிழமை (09) மாலை புத்தளம் நாகாஸ் விளையாட்டு மைதானத்தில் (இஜ்திமா மைதானம்) இடம்பெற்றது.

ஐந்து ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றன. தொடரின் இறுதிப்போட்டிக்கு புத்தளம் ஜுவனைல் அணியும் ஆனமடு ஏ.பீ.சி. அணியும் தகுதி பெற்றிருந்தன.


எனினும் இறுதிப்போட்டி நடத்த முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்ததால், குழுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆனமடு ஏ.பீ.சி. அணிக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டதோடு பரிசுத்தொகையாக ரொக்கப்பணம் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் நகர சபை உறுப்பினருமான ஏ.ஓ.அலிகான் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .