Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் விவேகாநந்தா இல்லம் 184.5 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
கடந்த திங்கட்கிழமை (9) ஆரம்பமான இவ்விளையாட்டு போட்டிகள், நேற்று வியாழக்கிழமை(12) நிறைவடைந்தன.
சிவானந்தா, விபுலானந்தா, இராமகிருஷ்ணா, விவேகாநந்தா என 4 இல்லங்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன.
திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் ஆரம்ப நாள் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
13, 15, 17. 19. 21 என ஐந்து வயதுப்பிரிவுகளுக்கு இடையே 54 தனி நிகழ்வுகளும் 9 அஞ்சல் ஓட்டங்களும் 2 அணிநடை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
இப்போட்டியில், இராமகிருஷ்ணா இல்லம் 177 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் விபுலாநந்தா இல்லம் 170 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் சிவானந்தா இல்லம் 137 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுகொண்டன.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றி கிண்ணங்களை கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago