Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணிக்கும் கல்பிட்டி பேர்ள்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில், கல்பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றி பெற்றது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தி வரும் எப்.ஏ. கிண்ணத்துக்கான இந்த கால்பந்தாட்ட போட்டி, ஞாயிற்றுக்கிழமை(15) மாலை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டி நிறைவுபெறும்வேளை இரு அணிகளும் தலா ஒரு கோலினை பெற்று சமநிலை வகித்ததால் வெற்றியை தீர்மானிப்பதற்கான தண்ட உதையில் 04:02 கோல்களினால் கல்பிட்டி பேர்ள்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.ஏ.எம். கியாஸ், எம்.எஸ்.எம். ஜிப்ரி ஆகியோர் கடமையாற்றினர்.
இந்த வெற்றியின் மூலமாக புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினை மையப்படுத்தி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் எப்.ஏ.கிண்ணத்துக்காக வரிசைப்படுத்தப்பட்டுள்ள குழுவில் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
இறுதிப்போட்டியில் பேர்ள்ஸ் அணி, புத்தளம் நகரின் பலம் வாய்ந்த லிவர்பூல் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
hijas Tuesday, 17 February 2015 03:08 AM
Well done guys
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
9 hours ago
07 Jul 2025