George / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் 11ஆவது வருடமாக நடத்திய சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 'நீர்கொழும்பு ஏசஸ்-பி' அணி (' நேபழஅடிழ யுஉநள - டீ )' வெற்றிப்பெற்றது.
இந்த சுற்றுப் போட்டியில் ரொக்கர்ஸ் அணி, இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.
கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சதீஸ் மோகன் தலைமையில் நீர்கொழும்பு கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை, போட்டிகள் நடைபெற்றன.
இச்சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் கல்லூரியின் அதிபர் என் புவனேஸ்வர ராஜா , தொழிலதிபர் முருகானந்தன், ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்னர்.
கல்லூரியின் பழைய மாணவர்கள் அடங்கிய 26 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்கு பற்றின.
ஒரு அணியில் அறுவர் பங்கு பற்றினர். முதலாம் சுற்றுப் போட்டிகள் நான்கு ஓவர்களைக் கொண்டதாகவும் இரண்டாம் சுற்று முதல் அரையிறுதி வரை மூன்று ஒவர்களைக் கொண்டதாகவும், இறுதிப் போட்டி நான்கு ஓவர்களை கொண்டாதாகவும் அமைந்தன.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் சிறந்த துடுப்பாட்டக்காரராகவும் 'நீர்கொழும்பு ஏசஸ்-பி' அணியை சேர்ந்த எப்.ஏ.எம். அஸ்காப் தெரிவானார்.
சிறந்த பந்து வீச்சாளராக 'நீர்கொழும்பு ஏசஸ்-பி' அணியைச் சேர்ந்த டி.அனோசன் தெரிவு செய்ப்பட்டார். எட்ரிக் சாதனைக்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பிரகாசிக்கும் அணியாக 'ஸ்டெப்னிட்டா பைட்டர்ஸ் - எ' அணி தெரிவு செய்யப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கும் வீர்களுக்கும், அதிதிகள் பரிசில்களை வழங்கினர். பெரும் எண்ணிக்கையான பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.



15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago