George / 2015 பெப்ரவரி 18 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
கரவெட்டி பிரதேச இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியொன்றில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் மைக்கல் விளையாட்டுக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றன. மொத்தமாக 23 அணிகள் இந்தச் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டன. அணிக்கு 6 பேர் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றன.
இறுதிப்போட்டியில் மைக்கல் இளைஞர் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கொம்பாந்துறை இளைஞர் விளையாட்டுக்கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொம்பாந்துறை அணி 5 ஓவர்களில் 30 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மைக்கல் அணி 3.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
4 minute ago
14 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
34 minute ago