2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிண்ணத்தை தனதாக்கியது விக்டோரியன்ஸ் அணி

George   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன் 

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 9 பேர் 7 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் போட்டியில் விக்டோரியன்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தச் சுற்றுப்போட்டியில் 30 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றின. சனிக்கிழமை (21) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சுழிபுரம் விக்டோறியன்ஸ்

விளையாட்டுக்கழக அணியும் உடுவில் ஸ்டார் போய்ஸ் அணியும் மோதின. 

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய சுழிபுரம் விக்டோரியன்ஸ் அணி 7 ஓவர்களில் 47 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உடுவில் ஸ்டார்ஸ் போய்ஸ் அணி 7 ஓவர்கள் 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .