Kogilavani / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு, அல் - ஹிலால் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி, செவ்வாய்க்கிழமை(24) கல்லூரி மைதானத்தில் அதிபர் எம்.எம்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி.பெர்ணாந்து, பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.ஸி.பி.பெர்ணாந்து, உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பிரபா (தமிழ் மொழிப் பாடசாலைகள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜெஸ்மின், லோட்டஸ், ரோஸ், ஓக்கிட் ஆகிய இல்லங்களை சேர்ந்த மாணவர்கள் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அணிவகுப்பு, உடற்பயிற்சிக் கண்காட்சி, விநோத உடைப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் இதன்போது நடைபெற்றன.
போட்டிகளின் முடிவில் லோட்டஸ், ரோஸ், ஓக்கிட் ஆகிய இல்லங்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாமிடங்களைப் பெற்றுக்கொண்டன.









22 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago