2025 நவம்பர் 19, புதன்கிழமை

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரிலுள்ள கிரிக்கெட் கழகங்களுக்கு 'டேப் போல்' மற்றும் 'லெதர் போல்' கிரிக்கெட்டை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்று  புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ்  தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை (24) புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


புத்தளத்தில் கிரிக்கெட் கழகங்கள் இன்னமும் மென்பந்து முறைமையை பயன்படுத்துகின்றன.


தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் 'டேப் போல்' மற்றும் 'லெதர் போல்' முறையே காணப்படுகின்றமையினால் புத்தளத்தையும் அதே நிலைக்கு கொண்டு அவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கடந்த 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம்செய்த நகரபிதா கே.ஏ.பாயிஸ் மற்றும் குழுவினர், முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கிரிகெட் ஆடிய அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.


இக்கலந்துரையாடலில் முன்னாள் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ரபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X