2025 நவம்பர் 19, புதன்கிழமை

நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள்

Administrator   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்மடு நாவலடி நாமகள்  வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி வியாழக்கிழமை (27) பாடசாலையின் அதிபர்  வி.குணசீலன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.  

இவ்வருட இல்ல விளையாட்டு போட்டியில்  191 புள்ளிகளை பெற்று திருமகள்  இல்லம் 3ஆம் இடத்தையும்   193 புள்ளிகளை பெற்று மலைமகள் இல்லம் 2ஆம் இடத்தையும் 221 புள்ளிகளை பெற்று கலைமகள்  இல்லம் 1ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

 பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில்  கலைமகள் இல்லம் அதிக புள்ளிகளை பெற்று 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனானது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு கோட்ட கல்வி அதிகாரி எ.சுகுமாரன், உதவிக்கல்விப் பணிப்பாளர், உடற்கல்வி  வி.லவக்குமார், திராய்மடு  வைத்தியசாலை வைத்திய அதிகாரி திருமதி .டி. மோகனசுந்தரம்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X