2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிநேகப்பூர்வ கால்ப்பந்தாட்ட போட்டி

Kogilavani   / 2015 மார்ச் 11 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், தில்லையடி நியூ பிரண்ட்ஸ் கால்ப்பந்தாட்ட கழகத்தின் 40 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் வீரர்களுக்கும் தற்போதைய இளம் வீரர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ கால்ப்பந்தாட்ட போட்டி செவ்வாய்க்கிழமை (10) மாலை தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

முன்னாள் வீரர்கள் கழகத்துக்காக ஆற்றிய தியாகங்களை நினைவு கூர்வதற்காகவும் தியாகங்களையும் முன்மாதிரிகளையும் புதிய வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதற்காகவும் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக நியூ பிரண்ட்ஸ் கால்ப்பந்தாட்ட கழகத்தின் ஊடக பிரிவு பொறுப்பாளர் அலை ரஜனி தெரிவித்தார்.

நடைபெற்ற இந்த சிநேகபூர்வ கால்ப்பந்தாட்ட போட்டியில் 3:1 கோல்களினால் அனுபவம் முதிர்ந்த அணியினரை இளைய தலைமுறையினர் தோற்கடித்து வெற்றி வாகை சூடினர்.

போட்டியின் நடுவர்களாக எம்.எஸ்.எம்.பஸ்ரின், அருண், அலி ஆகியோர் கடமையாற்றினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .