Thipaan / 2015 மார்ச் 14 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
தி-கிண்ணியா அல் அக்ஷா கல்லூரியின் 87ஆவது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அதிகப்படியான புள்ளிகளைப் பெற்று அந்தூரியம் இல்லம் (நீலம்) வெற்றி பெற்றது.
கிண்ணியா அல்- அக்ஷா கல்லூரியின் 87 வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியா அல்-அக்ஷா கல்லூரி மைதானத்தில் அதிபர் ஏ.ஆர்.எம்.உபைத்துல்லா தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், சிறப்பு அதிதியாக கிண்ணியா வலயக் கல்வி பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.நசூவர்கான கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் கௌரவ அதிதிகளாக சட்டத்தரணி எம்.ஐ.பாறூக் கந்தளாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்எம்.சுபையிர் உட்பட பலா கலந்து கொண்டனர்.
இதில் நீலம் இல்லமான அந்தூரியம் 306 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
சிவப்பு இல்லமான ஜெஸ்மீன் 303 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை பச்சை இல்லமான றோஸ் 291 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் மஞ்சள் இல்லமான லோட்டாஸ் 223 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டது.
இப்போட்டியில் இல்ல அலங்காரம் ஜெஸ்மீன் முதலிடமும் அணி நடைப் போட்டியில் றோஸ் இல்லம் முதலிடமும் பெற்றது.


15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago