Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 மார்ச் 16 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்களுக்கிடையிலான15 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கிடையில் நடத்தப்பட்ட பட்மின்டன் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை சம்பியனாக தெரிவாகியுள்ளது.
நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலைக்கும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்குமிடையிலான பட்மின்டன் இறுதிப்போட்டி, கல்முனை வை.எப்.சி.உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை, ஒற்றையர் பிரிவில் சம்பியனானது.
இதேவேளை, 19 வயதுக்குட்டபட்ட பிரிவினருக்கிடையிலான பட்மின்டன் சுற்றுப்போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றிகள் மூலம் மூலம் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் பட்மின்டன் அணி, மாகாணப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.பி.மஹ்றூப் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago