George / 2015 மார்ச் 17 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டுக்கான தேசிய மரதன் ஓட்டப்போட்டியின் ஆண்களுக்கான போட்டியில் மத்திய மாகாணம் முதலாம் இடத்தையும் பெண்களுக்கான போட்டியில், மேல் மாகாணம் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தை மத்திய மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்திய லயனல் சமரவீர பெற்றுக்கொண்டார்.
இரண்டாம் இடத்தை ஊவா மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்திய ஆர்.எம் சமன் குமார பெற்றுகொண்டார். ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை ஊவா மாகாணம் பெற்று கொண்டது.
பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தை மேல் மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்திய நிலுக்கா ராஜசேகரவும் இரண்டாம் இடத்தை தென் மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்திய கயனித்தா அபேநாயக்கவம் பெற்றுக்கொண்டனர்.
பெண்களுக்கான சாம்பியன் பட்டத்தை மேல் மாகாணம் பெற்றுக்கொண்டது.
இந்த போட்டிகள் நுவரெலியா கோல்ப் விளையாட்டுத்திடலில் கடந்த சனிக்கிழமை (14) நடைபெற்றன. இதில் 200க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டிகள், சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றன.
வடமேல் மாகாண விளையாட்டுதுறை அமைச்சர் மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்ஜனி ஜயக்கொடி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
20 minute ago
24 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
51 minute ago
3 hours ago